அண்ணாவை புறக்கணித்து…. மோடிக்கு முக்கியத்துவம் கொடுத்த அதிமுக – புதிய சர்ச்சை…!!!

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் அரசியல் கட்சியினர் மக்களிடம் நேரடி பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர்.

இந்நிலையில் மதுரையில் நேற்று அதிமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் தேர்தல் பரப்புரை மேற்கொண்டன. இந்த பரப்புரை கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனரில் அண்ணாவின் புகைப்படம் இடம் பெறாதது பெரும் சர்ச்சையாகியுள்ளது. அண்ணாவின் பெயரில் கட்சி வைத்து அரசியல் செய்யும் இபிஎஸ்- ஓபிஎஸ் அண்ணாவை மறந்துவிட்டு மோடிக்கு முக்கியத்துவம் தந்ததாக சமூகவலைதளங்களில் விமர்சனம் எழுந்துள்ளது.