தமிழக பாஜக தலைவரான அண்ணாமலை அரசியல் மேற்படிப்பு படிப்பதற்காக இங்கிலாந்து செல்ல உள்ளார். அடுத்த மாதம் இவர் வெளிநாடு பயணம் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிலையில் தமிழக பாஜகவிற்கு புதிய தலைவரை நியமிக்கலாமா அல்லது பொறுப்புத் தலைவரை நியமிக்கலாமா என்று ஆலோசனை நடத்தப்பட்டது. இதனிடையே அண்ணாமலை கொடுத்த ராஜினாமா கடிதத்தை மேலிடம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகி உள்ளது.

தமிழக பாஜக தலைவர் பதவிக்கு வானதி சீனிவாசன் மற்றும் நைனார் நாகேந்திரன் ஆகியோரிடம் போட்டி நிலைமை வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் டெல்லியில் முகாமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. எனவே அண்ணாமலை வெளிநாடு பயணம் செல்வதற்கு முன்பு தமிழக பாஜக தலைவர் யார் என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.