ஆளுநர் மாளிகையில் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்தவர்களை சிறப்பிக்கும் விதமாக நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி தமிழகத்தில் ஒரு வித்தியாசமான அரசியல் சூழல் உள்ளது. எல்லாவற்றிற்கும் நாங்கள் திராவிடர்கள் என்று சொல்கிறார்கள். இந்தியா முழுவதுமாக ஒரு செயல் திட்டம் இருந்தால் அதை வேண்டாம் என்கிறது தமிழ்நாடு. முதலில் தமிழ்நாடு என்று சொல்வதைவிட தமிழகம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும் என்று கூறினார். ஆளுநருடைய இந்த பேச்சு கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை கர்நாடகவில் வரும் தேர்தலில் ஐபிஎஸ் ஆக பணியாற்றிய அதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என விரும்புவதாக காயத்ரி கூறியுள்ளார். அவர் கர்நாடக முதல்வராக ஆக முடியும், இங்கே தமிழ்நாடு, தமிழகம் குழப்பம் ஏற்படுத்துவது ஏன்? கர்நாடகாவில் அவரது புகழுக்காக மக்கள் அவரை ஏற்றுக்கொள்வார்கள். முதலில் தனது செல்வாக்கை அங்கு நிரூபிக்கட்டும் என டுவீட் செய்துள்ளார்.