மதுரை மாவட்டம் குளத்துப்பட்டி பகுதியில் பிச்சை (56) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 அக்காள்கள் மற்றும் ஒரு தங்கை இருக்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் திருமணம் முடிந்து தனித்தனியாக வசித்து வருகிறார்கள். இந்நிலையில் பிச்சையின் சித்தப்பா மகளான தங்கம்மாள் என்பவர் சிறு வயது முதலே அவர் மீது மிகுந்த பாசத்துடன் இருந்துள்ளார். இவர்கள் இருவரும் அருகருகே வசித்து வந்துள்ளனர்‌.

கடந்த 13-ஆம் தேதி திடீரென பிச்சைக்கு மாரடைப்பு ஏற்பட்டதில் அவர் காலமானார். இந்த தகவலை கேள்விப்பட்டு தங்கம்மாள் அங்கு சென்றார். தன் அண்ணனின் உடல்நிலை கட்டி அணைத்து அவர் அழும்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. மயங்கி விழுந்த தங்கம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர் இறந்துவிட்டதாக கூறிவிட்டனர். மேலும் அண்ணன் இறந்த சோகத்தில் தங்கையும் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.