அணில் ரோமங்களுக்காக… அணிலை கொன்றவர் கைது… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

புதுச்சேரியில் அணில் ரோமங்களுக்காக விஷம் தடவி பிஸ்கட்டுகளை கொடுத்து அணிலை கொன்றவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

நாட்டின் எங்கெல்லாம் பழங்கள் அதிகமாக இருக்கிறதோ அங்கெல்லாம் அணில்கள் இருப்பது வழக்கம். அதனை மக்கள் அனைவரும் ரசிப்பார்கள். ஆனால் புதுச்சேரியில் அந்த அணு உலை கொடூரமாக ஒருவர் கொலை செய்துள்ளார். புதுச்சேரியில் மரங்கள் அதிகம் உள்ள பகுதிகளில் சில தினங்களாக அணில்கள் இறப்பது அதிகரித்துள்ளது. அதனை அறிந்த போலீசார் விசாரணையில் ஈடுபட்டனர்.

அப்போது விசாரணையில், அணில் ரோமங்களுகாக விஷம் தடவிய பிஸ்கட்டுகளை கொடுத்து கொன்றது தெரிய வந்துள்ளது. மேலும் அவர் அணில் கறியை விற்பதும் தெரியவந்தது. இதனையடுத்து அந்த நபரை போலீஸார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமன்றி விஷல் தடவி கொல்லப்பட்ட அணில்களை சாப்பிட்டால் மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.