அட கடவுளே…. இதையுமா ஏலம் கேட்கறாங்க…..இதன் விலை 1.1 மில்லியன் பவுண்டா….!!!!

உலக அளவில் சாதனை படைத்த விஸ்கி பாட்டில் ஒன்று, அதிக தொகைக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.  

திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பயன்படுத்திய ஆடைகள், அணிகலன்கள், கண்ணாடி, இசைக்கருவி, கார், பைக், தொப்பி, ஓவியங்கள் உள்ளிட்டவற்றை பல கோடி ரூபாய்க்கு ஏலமிடப்படுவதை    பார்த்திருப்பீர்கள். ஆனால் அதிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை அல்லது முழு தொகையையும் ஏதாவது ஒரு தொண்டு நிறுவனத்திற்கு கொடுப்பார்கள். அந்த வகையில் இந்த முறை உலக அளவில் சாதனை படைத்த விஸ்கி பாட்டில் ஒன்றினை ஏலமிட்டுள்ளனர். மேலும் அதன் மூலம் வந்த தொகையை தொண்டு நிறுவனத்திற்கு வழங்கியுள்ளனர்.

இதையடுத்து இந்த ஸ்காட்ச் ரக விஸ்கியை 2021-ஆம் ஆண்டு மெக்கலன் என்ற நிறுவனம் உருவாக்கியது. மேலும் இந்த பாட்டில் 5 அடி நீளம், 11 அடி அங்குலம் நீளமுள்ளது. இந்நிலையில் கடந்த  2021-ஆம் ஆண்டு,செப்டம்பர் மாதம் 9-ஆம் தேதி அன்று, இந்த பாட்டில் உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டில் என்று கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. மேலும் 311 லிட்டர் கொள்ளளவு கொண்ட பாட்டிலில் அடைக்கப்பட்டுள்ள விஸ்கிக்கு ‘தி இண்ட்ரிபிட்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் அப்போது இந்த பாட்டிலை வாங்க பல மில்லினியர்களும் ஆர்வம் காட்டிய நிலையில், தற்போது இந்த மாதம் 25-ஆம் தேதி அன்று ஏலம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் படி, இந்த விஸ்கி பாட்டில் குறிப்பிட்ட அந்த தேதியில் லண்டன் மாநகரின் எய்டன்பெர்க்கில் உள்ள ல்யான் அண்ட் டார்பிள் என்ற ஏல விடுதியில் வைத்து ஏலம் விடப்பட்டது. மேலும் இந்த விஸ்கி பாட்டில் பிரிட்டிஷ் மதிப்பிற்கு சுமார் 1.1 மில்லியன் பவுண்டிற்கு விற்பனையாகியுள்ளது.

இதையடுத்து இந்த ஏலத்தை பற்றி லியோன் & டர்ன்புல்லின் நிர்வாக இயக்குனர் கவின் ஸ்ட்ராங்கின் கூறியுள்ளதாவது, “உலகின் மிகப்பெரிய ஸ்காட்ச் விஸ்கி பாட்டிலான இன்ட்ரெபிட் கலெக்‌ஷன், மிகப்பெரிய உலகளாவிய ஆர்வத்தை உருவாக்கியுள்ளது எனவும் இந்த ஏலத்தின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த பாட்டிலை  ஒரு சர்வதேச விஸ்கி சேகரிப்பாளர் ஒருவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இதையடுத்து இந்த ஏலத்தின் மூலம் கிடைத்த பெரும் தொகையில் இருந்து 25 சதவீதம், மேரி கியூரி மருத்துவ தொண்டு நிறுவனத்துக்கு வழங்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *