கிருஷ்ணகிரி மாவட்டம் பனங்காட்டூர் கிராமத்தில் முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவருடைய மனைவி சித்ரா (35). இவர் சம்பவ நாளில் வீட்டின் முன்பு நின்று உறவினர் ஒருவருடன் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரை திடீரென பாம்பு ஒன்று கடித்து விட்டு சென்றது. இதனால் சித்ரா வலியில் அலறி துடிக்கவே அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து கடித்த பாம்பை தேடினர்.

அப்போது பாம்பு புதரில் இருப்பது தெரியவந்த நிலையில் அந்த பாம்பை அவர்கள் பிடித்தனர். இதனையடுத்து சித்ராவை மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனைக்காக சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அப்போது பிடித்த பாம்பையும் ஒரு பிளாஸ்டிக் கவரில் போட்டு உடன் எடுத்துச் சென்றனர். இதனால் அங்கிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். மேலும் இந்த சம்பவத்தால் மருத்துவமனையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.