அட இந்த குக் வித் கோமாளி பிரபலம் தனுஷ் கூட படிச்சவரா?… வெளியான புதிய தகவல்…!!!

குக் வித் கோமாளி பிரபலம் பாபா பாஸ்கர் நடிகர் தனுஷுடன் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரே பள்ளியில் படித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் படு ஹிட்டாக ஓடிக்கொண்டிருக்கும் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இறுதிப் போட்டியை நெருங்கியுள்ள இந்த நிகழ்ச்சியில் அஸ்வின், கனி, பாபா பாஸ்கர், சகிலா, பவித்ரா ஆகியோர் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பாக பாபா பாஸ்கர், அஸ்வின் இருவரில் ஒருவர் இந்த நிகழ்ச்சியில் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர் .

cook with comali: பிக் பாஸால் தனுஷ் பட வாய்ப்பை இழந்தேன்: குக் வித் கோமாளி  பாபா பாஸ்கர் - cook with comali baba bhaskar says he missed dhanush film  due to bigg boss | Samayam Tamil

இந்நிலையில் பாபா பாஸ்கர் நடிகர் தனுஷுடன் எட்டாம் வகுப்பு வரை ஒன்றாக ஒரே பள்ளியில் படித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது . மேலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி, படிக்காதவன் உள்ளிட்ட பல படங்களில் பாபா பாஸ்கர் நடன இயக்குனராக பணிபுரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .