தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் வெளியான அச்சம் என்பது மடமையடா படத்தின் வாயிலாக ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதையடுத்து திரைப்படங்களில் நடித்து வந்த மஞ்சிமா, நடிகர் கவுதம் கார்த்திகை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான் இவர்களுடைய திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மஞ்சிமா சற்று குண்டாக இருந்த நிலையில், தற்போது  அவர் உடல் எடையை குறைக்க தொடங்கியுள்ளாராம். அதன்படி மஞ்சிமா உடல் எடையை குறைத்து வருகிறார். இதனிடையே அவரது லேட்டஸ்ட் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அடடே இது நம்ம மஞ்சிமாவா? என கூறி வருகின்றனர்.