தமிழ் திரையுலகில் இயக்குனர் மற்றும் நடிகராக இருப்பவர் சமுத்திரக்கனி. இவர் இயக்கத்தில் வெளியான நாடோடிகள், நிமிர்ந்து நில், வினோதய சித்தம் போன்ற திரைப்படங்கள் மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வரவேற்பை பெற்றது. இப்போது அவர் பல்வேறு படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதற்கிடையில் அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் துணிவு படத்தில் போலீஸ் அதிகாரியாக நடித்து உள்ளார்.

அதேபோன்று அவர் பல படங்களை கைவசம் வைத்துள்ளார். இந்த நிலையில் சமுத்திரக்கனி புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து தன் மகனுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை டுவிட்டரில் பதிவுசெய்துள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், சமுத்திரக்கனியின் மகன் அச்சு அசல் பார்ப்பதற்கு அவரை போலவே இருக்கிறாரே என்று கூறி வருகின்றனர்.