விஜய் மக்கள் இயக்கம் சார்பாக தொடர்ச்சியாக பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளிலும் உள்ள 10 மற்றும் 12 ஆம் வகுப்பில் முதல் மூன்று மதிப்பெண் பெற்ற மாணவ மாணவியருக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கினர். அன்னை நீலாங்கரையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் அறுசுவை உணவும் வழங்கப்பட்டது.

இந்நிலையில் விருது பெரும் மாணவ மாணவியருக்கு அடையாள அட்டை வழங்கும் பணியும் தொடங்கப்பட்டுள்ளது. மேலும், ரூபாய் இரண்டு கோடி செலவில் நலத்திட்ட உதவிகளை வழங்க திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.