அடேய் இப்படியா செய்வீர்கள்!….. ரகளை இறங்கிய தனுசு ரசிகர்கள்…. கவலையில் தியேட்டர் உரிமையாளர்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிகராக மட்டுமில்லாமல் தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறனை கொண்டவர். இவர் தற்போது மித்ரன் ஜதஹர் இயக்கிய திருச்சிற்றம்பலம் என்ற படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகை நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கன்னா, பிரகாஷ்ராஜ், இயக்குனர் பாரதிராஜா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. இந்த திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. நீண்ட நாட்களுக்கு பிறகு தியேட்டரில் வெளியாகும் தனுஷ் படம் என்பதால் ரசிகர்களும் பெரிய அளவில் திரண்டு வந்து படத்தை கொண்டாடினார்.

இந்நிலையில் திருச்சிற்றம்பலம் பட ரிலீஸான தியேட்டரில் ரசிகர்கள் ஸ்கிரீனை கிழித்ததால் உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். அதாவது சென்னை கோயம்பேட்டில் உள்ள திரையரங்குகளில் முதல் காட்சியை பார்க்க வந்த ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஸ்கீன் முன்பு நடனமாடியதாகவும் அப்போது சிலர் விரும்பத்தகாத செயலில் ஸ்கிரீனை கிழித்ததாகவும் கூறப்படுகிறது. ரசிகர்களின் இந்த செயலால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *