அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், சென்னை கொருக்குப்பேட்டையில் தமிழ்நாடு சமையல் தொழிலாளர் கலை முன்னேற்ற சங்கம், அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸின் உருவத்தில் 50 கிலோ இட்லி செய்துள்ளனர்.
கமலா ஹாரிஸுக்கு இட்லி, சாம்பார் பிடிக்கும் என கூறியதால் இவ்வாறு செய்ததாக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். கமலா ஹாரிஸ் அதிபரானால் பட்டாசு வெடித்து கொண்டாட உள்ளதாகவும் கூறியுள்ளனர்.