அடேங்கப்பா! ஒரு டிக்கெட் விலை 1.50 கோடி ரூபாய்…. திருப்பதி தேவஸ்தானம் புதிய அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவில் ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட 108 வைணவ திருத்தலங்களில் ஒன்றாகும். திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உதய அஸ்தமன சேவையை வெள்ளிக்கிழமை அன்று தரிசிக்க 1.50 கோடி ரூபாயும், சாதாரண நாட்களுக்கு 1 கோடி ரூபாயும், தேவஸ்தானம் கட்டணம் நிர்ணயித்துள்ளது. இந்த சேவைக்கு முதற்கட்டமாக 531 டிக்கெட்டுகள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினசரி சுப்ரபாதம் அர்ச்சனை தோமாலை உள்ளிட்ட சேவைகளை 1 நாள் முழுவதும் பக்தர்கள் கோவிலிலிருந்து தரிசனம் செய்யும் உதயஅஸ்தமன சேவை எனும் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இந்த சேவையில் கலந்து கொள்வதற்கு, பக்தர்களுக்கு வாய்ப்பளிக்கும் விதமாக தேவஸ்தானம் ஒரு சிறப்பு திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, உதய அஸ்தமன சேவையில் பங்கேற்பதற்கு சாதாரண நாட்களில் 1 கோடி ரூபாயும், வெள்ளிக்கிழமைகளில் பங்கேற்பதற்கு 1.50 கோடி ரூபாயும், தேவஸ்தானத்திற்கு செலுத்தவேண்டும்.

அவ்வாறு செலுத்தும் பக்தர்கள் தங்களுக்கு உகந்த நாளை தேர்வு செய்து வருடத்திற்கு ஒரு நாள் என 25 ஆண்டுகளுக்கு உதய அஸ்தமன சேவையில் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட உள்ளது. மேலும் இந்த சேவைக்காக பக்தர்கள் செலுத்தும் நிதியை திருப்பதியில் கட்டப்படக் கூடிய குழந்தைகள் நல மருத்துவமனைக்கு செலவு செய்யப்படும் என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதன் முதற்கட்டமாக இன்னொரு டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விரைவில் இதற்கான முன்பதிவு ஆன்லைனில் வெளியீடு செய்யப்பட உள்ளதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *