அடேங்கப்பா இவ்ளோ பணமா..? வாகன சோதனையில் வசமாக சிக்கியவை… பறக்கும் படை அதிரடி பறிமுதல்..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் வாகன சோதனையின்போது ஆவணம் இல்லாமல் கொண்டு செல்லப்பட்ட ரூ.8 3/4 லட்சம் பணத்தை பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே உள்ள செந்துறையில் வாகன சோதனையில் பறக்கும் படையினர் தீவிரமாக ஈடுபட்டு வந்தனர். அப்போது நத்தம் நோக்கி மணக்காட்டூரிலிருந்து சென்று கொண்டிருந்த காரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். அதன்பின் அந்த காரில் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அந்த சோதனையில் ரூ.8 லட்சத்து 71 ஆயிரத்து 950 கொண்டு செல்வது தெரியவந்தது.

இதுகுறித்து காரில் வந்தவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் பணத்திற்கான உரிய ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்து தேர்தல் அதிகாரிகள் விஜயலட்சுமி, திருமலையிடம் ஒப்படைத்தனர். அதன்பின் அந்த பணம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.