தெலுங்கு சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருக்கும் ராஜமௌலி இயக்கத்தில் ஆர்ஆர்ஆர் திரைப்படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்து சூப்பர் ஹிட் ஆனது. இந்த படத்தில் ராம்சரண் ஜூனியர் என்டிஆர் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆலியா பட், அஜய் தேவகன், ஸ்ரேயா சரண் உள்ளிட்ட பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். இந்த படம் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகியுள்ளது.
இது உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்த நிலையில் தற்போது விருதுகளை அள்ளி குவித்து வருகிறது. அமெரிக்காவில் நடைபெற்ற Seattle Critics Awards விழாவில் ’சிறந்த சண்டை காட்சிகள் அமைந்துள்ள படம்’ என்ற விருதை RRR திரைப்படம் தற்போது பெற்றுள்ளது.