ரோமானிய நாட்டில் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய டீ-சர்ட் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இணைந்துள்ளது. மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் இந்த டி-ஷர்ட் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த டீசர்ட் 108 அடி நீளமும் 241 அடி அகலமும் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. ரோமானிய நாட்டின் தேசிய கொடியை பிரதிபலிக்கும் வகையில் டீ-சர்ட் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளது. ரோமானிய நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்று இந்த முயற்சி மேற்கொண்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.