அடுப்பில் சுவையான கேக் தயாரிப்பது எப்படி ….!!

ஓவன் இல்லாமலேயே கேக் ஈசியாக அடுப்பில் எப்படி செய்வது என்று இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

கேக் செய்ய தேவையான பொருட்கள்:-

1. முட்டை – 4

2. மைதா மாவு – 1 கப்

3. சர்க்கரை – 1 கப்

4. பேக்கிங் பவுடர் – 3/4 ஸ்பூன்

5. உப்பு-சிறிதளவு

செய்முறை :

ஓவன் இல்லாமல் அடுப்பில் கேக் செய்ய தேவையான ஒரு அகலமான பாத்திரத்தை எடுத்துக்கொள்ளவும். அதில் நான்கு முட்டைகளை உடைத்து ஆன் பீட்டர் கொண்டு நன்றாக அடித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அடித்த முட்டைகளுடன் 1 கப் சலித்த மைதா மாவு மற்றும் 1 கப் சர்க்கரையை மிக்ஸியில் பவுடராக அரைத்து அதை அதனுடன் சேர்க்க வேண்டும்.

பிறகு 3/4 ஸ்பூன் பேக்கிங் பவுடர் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கட்டிகள் இல்லாமல் அதை நன்றாக கலந்து கொள்ளவும்.

அடுப்பில் ஒரு தோசைக்கல்லை வைத்து சூடான பிறகு ஒரு நான்ஸ்டிக் கடாயை எடுத்துக்கொள்ளுங்கள் அதில் நெய் அல்லது பட்டர் எதையாவது ஒன்றை நன்றாக தடவி விட வேண்டும்.

அடுப்பில் கேக் செய்வது எப்படி? - Seithisolai | DailyHunt

பின் கலந்து வைத்துள்ள கேக் மாவை நான்ஸ்டிக் கடாயில் ஊற்றி அடுப்பில் வைத்துள்ள தோசை கல் மீது வைத்து மூடிவிடவேண்டும்.

அதன் பின் அடுப்பை மிதமான சூட்டில் வைத்து 45 நிமிடங்கள் வரை கடாயில் இருக்கும் கேக்கை வேகவைக்க வேண்டும்.

45 நிமிடங்கள் கழித்த பின் அடுப்பிலிருந்து கேக்கை இறக்கியயுடன் தனியாக எடுத்தால் சுவையான கேக் தயாராகிவிடும். விருப்பமிருந்தால் கேக்கின் மேல் பக்கம் க்ரீமை தடவிக்கூட  சாப்பிடலாம், அது மிகவும் சுவையாக இருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *