அடுத்த 3 மணி நேரத்தில் மழை பெய்ய வாய்ப்பு… வானிலை மையம் தகவல்…!!

 

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில் 28 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தி.வள்ளூர், ரா.பேட்டை, வேலூர், பெரம்பலூர், அரியலூர், தேனி, திண்டுக்கல், சென்னை, கா.புரம், தி.மலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, க.குறிச்சி, சேலம், திருச்சி, திருப்பூர், கடலூர், சிவகங்கை, ரா.புரம், ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பத்தூர், மதுரை, விருதுநகர், தென்காசி, தூ.குடி, நெல்லை ஆகிய இடங்களில் மழை பெய்யும்.