அடுத்த வாரம் கொரோனா தடுப்பூசி… மத்திய அரசு ஒப்புதல்…!!!

கொரோனாவிற்கு எதிராக ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கு ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் பரவலாக தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

அதனால் கொரோனா தடுப்பூசி எப்போது மக்கள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில் ஆக்ஸ்போர்டு தடுப்பூசிக்கு மத்திய அரசு அடுத்த வாரம் அவசரகால பயன்பாட்டுக்கான ஒப்புதல் வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவிஷில்டு என்ற பெயரில் புனே சீரம் மற்றும் இந்தியா நிறுவனம் தயாரித்துள்ளது. இந்த தடுப்பூசிக்கு உலகில் ஒப்புதல் வழங்கும் முதல் நாடாக இந்தியா இருக்கும். இறுதி கட்ட சோதனை முடிவுகள் மருத்துவ கட்டுப்பாட்டு துறையிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், அடுத்த வாரம் தடுப்பூசிகள் ஒப்புதல் என்று தகவல் வெளியாகியுள்ளது.