தமிழகத்தில் வரும் கல்வியாண்டில் 10 மற்றும் பரனாம் வகுப்பு மாணவர்கள் தங்களது பாடங்களை முன்கூட்டியே படிக்கும் வகையில் வருகின்ற ஏப்ரல் மாதத்தில் அவர்களுக்கு புத்தகங்கள் வழங்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. பொதுத்தேர்வுக்கு தயாராகும் பத்து மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் கோடை விடுமுறையில் படிப்பதற்காக புதிய கல்வி ஆண்டு தொடங்குவதற்கு முன்கூட்டியே பாடநூல்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. புத்தகம் அச்சிடும் பணிகள் வருகின்ற மார்ச் மாதம் முடிவடையும் நிலையில் ஏப்ரல் மாதம் புத்தகங்கள் விற்பனை தொடங்கும்.

அதனால் அடுத்த கல்வியாண்டில் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் இந்த கோடை விடுமுறை முதலே அதற்கு தயாராகலாம். மற்ற வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் அச்சடிக்கும் பணி மாநில கவுன்சிலில் இருந்து குறுந்தகடுகளை பெற்ற பிறகு விரைவில் தொடங்கும் எனவும் ஆண்டு அட்டவணையின் படி அனைத்து மாவட்ட பள்ளிகளுக்கும் மே மாதம் புத்தகங்கள் அனுப்பி வைக்கப்படும் எனவும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது