இந்தியா மற்றும் வங்காள தேசத்திற்கு இடையே நல்லதொரு நட்புறவு இருக்கிறது. இந்நிலையில் இந்தியாவில் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரியிலுள்ள அசாம் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் சந்தையிடல் முனையத்திலிருந்து வங்காள தேசத்தின் பர்பதிபூரில் உள்ள வங்காளதேச பெட்ரோலியம் கார்ப்பரேஷனுக்கு குழாய் வழியாக எரிபொருள் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக 130 கிலோமீட்டர் தொலைவில் இந்த இந்திய வங்காளதேச நட்புறவு குழாய் வழி ரூ.377.08 கோடியில் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 12-ஆம் தேதி இந்தியாவின் நிதி உதவியை கொண்டு இந்த இரு தரப்பு திட்டத்தின் இன்ஜினியரிங் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில் நுமலிகார் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனத்தின் மூத்த அதிகாரி கூறியதாவது, குழாய் வழியாக எரிபொருள் விநியோகத் திட்டத்தை அடுத்த மாதம் தொடங்கி வைக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.