அடுத்த பிளான்…! திமுகவில் இணைவது எப்போது….? அன்வர் ராஜா முக்கிய ஆலோசனை….!!!!

சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதால் அன்வர்ராஜா அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார். இவர்  பாஜகவுடனான அதிமுக கூட்டணியை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வந்தவர் ஆவார். இதனையடுத்து தற்போது சசிகலாவை ஆதரித்து அன்வர்ராஜா பேச தொடங்கியது அதிமுக தலைமை அவரை அதிமுகவில் இருந்தே நீக்கிவிட்டது. இதற்கு முன்பாக புகழேந்தி  பின்ன்னணியிலும் சசிகலா விவகாரமே இருந்தது. சசிகலாவை வரவேற்கலாம் என்று புகழேந்தி கூறியது தான் அவரை நீக்கியதற்கு காரணம் என்று அதிமுக தலைமை நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

இதனையடுத்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா தன்னைப் பின் தொடர்ந்து பலரும் சசிகலாவுக்கு ஆதரவளிப்பார்கள் என்று எதிர்பார்த்தார். ஆனால் அவருக்கு ஏமாற்றமே கிட்டியது. இந்த நிலையில் தன்னுடைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தன்னுடைய ஆதரவாளர்களுடன் சென்னையில் இன்னும் இரண்டு நாட்களில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.

இதற்கிடையில் பேட்டி ஒன்றில் பேசிய அன்வர் ராஜா, “சசிகலாவை நான் சின்னம்மா என்று தான் அழைப்பேன், அதேபோல் கலைஞர் என்று தான் குறிப்பிடுவேன்” என்று கூறியிருந்தார். இது அன்வர் ராஜா திமுகவில் சேருவதற்கான அறிகுறி என்று அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்னர் பெரியளவில் அரசியல் வட்டாரத்தில் மாற்றம் இருக்கும் என அடித்துக்கூறுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *