சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பேட்மேன் அஜிங்கியா ரஹானே தமிழில் சில வார்த்தைகள் பேசும் வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வருகிறது. இந்த வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளது. அதில் ரஹானே வணக்கம், சாப்டீங்களா, நீங்க எப்படி இருக்கீங்க, போயிட்டு வரேன் ஆகிய வார்த்தைகளை பேசுகிறார். இந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
📕Learn Tamil in 3 weeks with @ajinkyarahane88!#WhistlePodu #Yellove🦁💛 pic.twitter.com/SMIk6z4n0p
— Chennai Super Kings (@ChennaiIPL) March 21, 2023