இயக்குனர் வெற்றிமாறன் அளித்த பேட்டியில் பிரகாஷ்ராஜ் சாபம் கொடுத்ததாகக் கூறியுள்ளார் .
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனர்கள் நான்கு பேர் இயக்கிய ஆந்தாலஜி’பாவக் கதைகள்’ திரைப்படம் கடந்த வாரம் நெட்பிளிக்ஸ்ஸில் வெளியானது. ஆவணக் கொலைகளை மையப்படுத்தி உருவாகியுள்ள இந்தப்படம் அனைவரின் பாராட்டை பெற்று வருகிறது . சமீபத்தில் பாவக் கதைகள் படத்தில் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கிய ‘ஓர் இரவு’ படம் குறித்து பேட்டியளித்துள்ளார் . அதில், ‘நடிகர்களை அழுத்தமான காட்சிகளில் நடிக்க வைக்கும் எனக்கும் இயக்குனர், மணிரத்னத்திற்கும் அடுத்த ஜென்மத்தில் மிளகாய் மண்டியில் பல்லிகளாக பிறக்கவேண்டும் என்று பிரகாஷ்ராஜ் சாபம் கொடுத்ததார் என கூறியுள்ளார். அந்த அளவிற்கு படத்தின் கிளைமாக்ஸ் காட்சி அழுத்தமாக இருந்துள்ளது.

மேலும் நடிகர் பிரகாஷ்ராஜ் ‘ஓர் இரவு’ படத்தின் கிளைமேக்ஸ் காட்சியை நடித்து முடித்த மறுநாள் காலை அதை நினைத்து அரை மணி நேரம் அழுததாக பிரகாஷ்ராஜின் மனைவி வெற்றிமாறனிடம் கூறியதாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளார். இந்த படத்தில் சாய்பல்லவி மற்றும் பிரகாஷ்ராஜ் ஆகியோரின் நடிப்புக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது. அதிலும் குறிப்பாக நடிகை சாய்பல்லவி கிளைமாக்ஸ் காட்சியில் பேசும் வசனங்கள் பார்ப்போர் மனதை உருக்கும் வகையில் அமைந்துள்ளது .