அடுத்தடுத்த ஹிட்டுக்கு ரெடியாகும் சூர்யா..! வெறித்தனமான வெயிட்டிங்கில் ரசிகர்கள் …!!

கோலிவுட்டின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூர்யா. வித்தியாசமான நடிப்பில் பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ள இவர், அடுத்தடுத்து சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுமட்டுமல்லாமல் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் மூலம் படம் படங்களையும் தயாரித்து வருகிறார்.

இவரின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ள ஜெய்பீம் படம் வரும் தீபாவளிக்கு வெளியாகிறது. அதுமட்டுமல்லாமல் இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாக உள்ள வாடிவாசல் படத்திலும் சூர்யா நடிக்க இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் தயாரிக்க உள்ள மற்றொரு படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இவர் நடிக்க போகும் இந்த இரு படங்களுக்கும் ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சூரரைபொற்று படத்தில் சூர்யா – ஜிவி பிரகாஷ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து அதே கூட்டணி மீண்டும் தொடர உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *