அடுத்தடுத்த நிலநடுக்கம்.. எச்சரிக்கை ஒலியா.. பீதியில் மக்கள்..!!!

அருணாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட திடீர் நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.5 ஆக பதிவாகியுள்ளது. அருணாச்சல பிரதேச மாநிலம் சாங்லாங் அதிகாலை 02.18 மணி அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.5 என்ற அளவில் பதிவாகியுள்ளதாக நிலநடுக்கத்திற்கான தேசிய புவியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாங்லாங் மாவட்டத்தில் 76 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட உயிர் மற்றும் பொருள் சேதம் குறித்து தகவல் வெளியாகவில்லை. வடகிழக்கு மாநிலங்களில் கடந்த சில வாரங்களாக நில நடுக்கம் ஏற்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.