அடிக்கடி ஏற்பட்ட தகராறு… மனைவிக்கு நடந்த விபரீதம்… டிரைவரை கைது செய்த போலீசார்…!!

குடும்ப தகராறு காரணமாக ஆத்திரமடைந்த கணவன் மனைவியை கத்தியால் தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தேனி ஆவட்டம் தவதனபட்டியை அடுத்துள்ள ஜி.கல்லுப்பட்டியில் மகேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். வேன் டிரைவரான இவர் சில மாதங்களாக வேலைக்கு செல்லாமல் பல இடங்களில் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில் இவரது மனைவி சித்திரைக்கனி அப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சத்துணவு சமையலராக வேலை பார்த்து வந்துள்ளார்.

இதனையடுத்து மகேஸ்வரன் வாங்கிய 5 லட்ச ரூபாய் கடனை திருப்பி செலுத்துமாறும், வேலைக்கு செல்லுமாறும் மனைவி கூறியுள்ளார். இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் சித்திரக்கனி கோபித்துகொண்டு அவரது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனைதொடர்ந்து மகேஸ்வரன் நேற்று சித்திரைகனியின் தாயார் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அப்போது ஆத்திரமடைந்த மகேஸ்வரன் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சித்திரைகனியை தாக்கியுள்ளார். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தேனி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இதுகுறித்து தகவலறிந்து சென்ற தேவதானப்பட்டி காவல்துறையினர் விசாரணை நடத்தி மகேஸ்வரன் மீது வழக்குபதிவு செய்து அவரை கைது செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *