அடிக்கடி ஏற்படும் மின்தடையால் அவதி… கோரிக்கை விடுக்கும் பொதுமக்கள்…!!!!!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள சிக்கலில் பிரசித்தி பெற்ற  சிங்காரவேலர் முருகன் கோவில் அமைந்துள்ளது. சிக்கல் வடக்கு வீதியில் உள்ள மின்வாரிய அலுவலக கட்டுப்பாட்டில் சிக்கல், மஞ்ச கொள்ளை, சங்கமங்கலம், புத்தூர், புரவசேரி உட்பட 22 கிராமங்கள் அமைந்துள்ளது. இங்கு 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின் இணைப்புகள் உள்ளது. இந்நிலையில் நாகை மேலக்கோட்டை வாசலில் உள்ள துணை மின் நிலையம் மூலமாக சிக்கல் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தற்போது சிக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் தொடர்ந்து அடிக்கடி மின்தடை ஏற்படுவதால் அந்த பகுதி மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்நிலையில் இப்படி முன்னறிவிப்பு இல்லாமல் அடிக்கடி மின் நிறுத்தம் செய்யப்படுவதால் மக்கள் சிரமம் அடைந்துள்ளனர். சிக்கல் பகுதியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தெற்கு வீதி மெயின் ரோடு பகுதியில் நிறுவப்பட்ட மின்மாற்றுப்பணிகள் முடிவடைந்தும் இன்னும் பயன்பாட்டிற்கு வராமல் இருந்து வருகிறது. இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் சிக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கிராமங்களில் தடை இல்லாமல் மின்சாரம் வழங்க மாவட்ட நிர்வாகம் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Leave a Reply