அடிக்கடி ஊர் சுற்றுபவரா நீங்கள்?…. உங்களுக்கான சிறந்த கிரெடிட் கார்டு…. இதோ ஃபுல் லிஸ்ட்….!!!!

அடிக்கடி சுற்றுலா செல்பவர்கள் மற்றும் பயணம் மேற்கொள்பவர்கள் பல்வேறு சலுகைகளை பெறுவதற்கு செலவுகளை குறைக்கவும் கிரெடிட் கார்டுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதிலும் குறிப்பாக சுற்றுலா செல்பவர்களுக்கு பல்வேறு கிரெடிட் கார்டுகள் பயன்பாட்டில் உள்ளது. பல கிரெடிட் கார்டுகள் விமான நிலையத்தில் lounge வசதியை இலவசமாக பயன்படுத்துவதற்கு அனுமதிக்கின்றன. அதன்படி சுற்றுலா செல்வோருக்கு அல்லது அடிக்கடி விமானங்களில் பயணம் செல்பவர்களுக்கு சிறந்த கிரெடிட் கார்டுகள் சிலவற்றை பார்க்கலாம்.

HDFC Regalia Credit Card
இந்த கிரெடிட் கார்டு வைத்திருப்போர்கள் விமான நிலையங்களில் Lounge வசதியை இலவசமாக  பயன்படுத்தலாம்.வருடத்திற்கு 12 முறை இந்தியாவிலும், ஆறு முறை வெளிநாடுகளிலும்  பயன்படுத்தலாம்.

SBI Card Prime
இந்த கார்டு வைத்திருப்போர் இலவசமாக ஏர்போர்ட் Lounge வசதியை பயன்படுத்தலாம். வருடத்திற்கு 8 முறை இந்தியாவிலும், 4 முறை வெளிநாடுகளிலும் பயன்படுத்தலாம்.  இதுமட்டுமில்லாமல்  Trident Privilege, Club Vistara Silve மெம்பர்ஷிப்புகளும் இலவசமாக கிடைக்கின்றன.

SBI Elite Credit Card
இந்த கார்டு வைத்திருப்போர் ஒரு காலாண்டுக்கு 2 முறை உள்நாட்டு ஏர்போர்ட் Lounge வசதியும், ஆறு முறை வெளிநாட்டு ஏர்போர்ட் Lounge வசதியும் பயன்படுத்தலாம்.

HDFC Diners Club Black Credit Card
இந்த கார்டுவைத்திருப்போர் இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் எவ்வளவு முறை வேண்டுமானாலும் ஏர்போர்ட் Lounge பயன்படுத்த முடியும். மேலும் Club Marriott, Forbes, Amazon Prime, Zomato Pro, Times Prime உள்ளிட்ட மெம்பர்ஷிப்புகளும் இந்த கார்டில் உங்களுக்கு கிடைக்கின்றன.