“அடிக்கடி இந்த வழியாக போகும்” அச்சத்தில் வாகன ஓட்டிகள்…. வனத்துறையினரின் எச்சரிக்கை…!!

வாகன ஓட்டிகள் யானைகளுக்கு தொந்தரவு அளிக்கக்கூடாது என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் ஏராளமான வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் வெளியேறிய காட்டு யானைகள் சிக்கள்ளி அருகே சாலையை கடந்து சென்றுள்ளது. இதனை பார்த்ததும் வாகன ஓட்டிகள் ஆங்காங்கே வாகனங்களை நிறுத்தி விட்டனர். சிலர் யானைகளை தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்துள்ளனர்.

இதனையடுத்து யானைகள் சாலையை கடந்து சென்ற பிறகு வாகன ஓட்டிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, உணவு மற்றும் தண்ணீரை தேடி வன விலங்குகள் அடிக்கடி சாலையை கடந்து செல்கிறது. எனவே வாகன ஓட்டிகள் வனவிலங்குகளுக்கு தொந்தரவு அளிக்காமல் செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *