கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடந்த ஒரு சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது நடு ரோட்டில் பைக்கில் இரு வாலிபர்கள் செல்கிறார்கள். அவர்கள் குடிபோதையில் ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் சென்று நிலையில் திடீரென நடுரோட்டில் பட்டாசை கொளுத்தி போட்டனர்.

அப்போது வாகனங்களை அவ்வழியாக சென்று கொண்டிருந்தது. இருப்பினும் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலான நிலையில் சம்பந்தப்பட்ட வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்களின் பெயர் ஆதித்யா (19) மற்றும் அக்ஷய் குமார் (18) என்பது தெரிய வந்துள்ளது. மேலும் அந்த வாலிபர்களுக்கு போலீசார் அபராதம் விதைத்ததோடு கடுமையாக எச்சரித்துள்ளனர்.