அடப்பாவிங்களா…. ஊருக்கு போன கேப்ல இப்படியா பண்ணுவீங்க?…. வீட்டிலிருந்த மொத்தமும் அபேஸ்…. இதைக்கூட விடல….!!!

கோயம்புத்தூர் மாவட்டம் கோவை பீளமேடு சேரன் கார்டன் என்ற பகுதியை சேர்ந்த அய்யாவு என்பவர் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 4ஆம் தேதி நண்பனின் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தென்காசி வரை சென்றுள்ளார். அதன்பிறகு நிகழ்ச்சி முடிந்து நேற்று இவர் தென்காசியிலிருந்து கோவையில் இருக்கும் வீட்டிற்கு திரும்பினார். இவர் வீட்டிற்கு வந்த பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது.

அதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் உடனே வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த வெள்ளி விளக்கு, 1.5 பவுன் நகைகள் உள்ளிட்ட பொருள்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு சக்கர வாகனத்தையும் மர்ம நபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் தெரிவித்தார். இதையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து கைரேகை நிபுணர்களுடன் வீட்டில் பதிவான தடயங்களை சேகரித்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *