அடப்பாவிகளா..! விவசாயிகளின் விரோதிகளா ? தமிழகம் முழுவதும் போஸ்டர் ஒட்டுவோம் …!!

நாங்களும் வீடுவீடாக சொல்லி, போஸ்டர் ஓட்டுவோம் என பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா கூறியுள்ளார்.

நேற்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின்  மூத்த தலைவர் எச்.ராஜாவிடம், தலைகீழா நின்றாலும் அதிமுகவையும், பிஜேபியும் விவசாயிகள் மன்னிக்க மாட்டார்கள் என்று டி ஆர் பாலு கேட்ட கேள்விக்கு பதிலளித்த பாஜகவின் மூத்த தலைவர் எச்.ராஜா, நான் ஒரே ஒரு கோரிக்கைபாலுவிடம் வைக்கின்றேன். எங்க வீட்டுக்கு அவரு வரட்டும், நான் அவரு வீட்டுக்கு வருகின்றேன்.  நான் பால் கறக்கின்றேன், நீங்களும் கறங்க. என்ன விட வேகமாக கறந்து விட்டீர்கள் என்றால் நீங்க விவசாயிகளுக்கு பேசுவதை நான் ஏற்றுக்கொள்கிறேன்.

இல்ல மாட்டு வண்டி ஓட்டனுமா ? ஒட்டி பாக்குறேன். கம்மாயில தண்ணி பாய்க்கணுமா ? பாய்ச்சு பாப்போம். கருது அடிக்கணுமா ? அடிச்சு பாப்போம். மாடு கொம்புள்ள பால் கறக்குமா ? காம்புல பால் கறக்குமா என்று தெரியாத, விவசாயம் என்றால் அனா… ஆவன்னா தெரியாத பாலு பேசுவதா விவசாயம் பண்ணுற எந்த விவசாயி தமிழ்நாட்டில் போராட்டம் நடத்துறாங்க ?

கருணாநிதி என்ற தமிழ் இன விரோதி,  டெல்டா விவசாயிகளின் எதிரி, ஊழல் குற்றச்சாட்டு காரணமாக இந்திரா காந்தி மிரட்டியதால், காவிரிக்கு தமிழ்நாட்டுக்காக போட்ட வழக்கை வாபஸ் வாங்கினார். தமிழ் இன விரோதி கருணாநிதி, விவசாயிகளின் எதிரி கருணாநிதி. டி ஆர் பாலு, கருணாநிதி, திராவிட முன்னேற்ற கழகத்தினர் எல்லாம் விவசாயிகளிடம் மன்னிப்பு கேட்கணும்.

ஜூன் மாதம் 1970இல் எலக்ட்ரிக் பில்லுக்கு யூனிட்டுக்கு ஒரு நயா பைசா குறைக்கச் சொல்லி விவசாயி போராட்டம் நடத்தினார்கள். அதில் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில்3 விவசாயிகள் சுட்டுக்கொல்ல பட்டனர். கொன்னது மட்டுமல்லாமல் துப்பாக்கியிலிருந்து தோட்டாக்கள் வராமல் மலர்களா ? கொட்டும் என கருணாநிதி சொன்னார். அடப்பாவிகளா..!  விவசாயிகளின் விரோதிகளா ? திமுக விவசாய குடும்பத்துல கொல்லி வச்ச கூட்டம், கொலைகார கூட்டம். விவசாயி வயித்துல மண்ணை அள்ளி போட்ட கூட்டம், அவர்கள் பேசுவதா ?

இன்னைக்கு காவேரி தமிழ்நாட்டுக்கு கிடைத்திருந்தது என்றால் ஒரு தனிநபர், விவசாயின் தலைவர் மன்னார்குடி ரெங்கநாதன் தான் காரணம். மன்னார்குடி ரெங்கநாதன் இல்லை என்றால் தமிழ்நாட்டுக்கு காவிரி இல்ல. அந்த ரங்கநாதன் சொல்றாரு இந்த சட்டம் தேவை என்று. உண்மையான விவசாயிகள் எல்லாரும் இந்த  சட்டத்தை ஆதரிக்கின்றார்கள்.

இருக்கிற எந்த சிஸ்டத்தையும் டிஸ்டப் பண்ணல. குறைந்த பட்ச ஆதார விலை இருக்கும், மண்டிகள் இருக்கும், நடந்துகிட்டு இருக்கிற காண்ட்ராக்ட் விவசாயத்துக்கு பாதுகாப்பு கொடுப்போம். விவசாயிகள் இஷ்டப்பட்ட அவர், எங்க வேணும்னாலும் விற்க முடியாது என்று இந்ததை மாற்றியுள்ளோம்.

பாலுக்கு சொல்கின்றேன் நான். பெருமாநல்லூரில் நினைவுச்சின்னம் இருக்கு. ஏற்கனவே போட்டோ எடுத்து என் பேஜில் போட்டு இருக்கேன். வீடு வீடா நோட்டீஸ் அடித்து கொடுப்போம். விவசாய விரோத திமுக, விவசாயிகளை கொலை செய்த கொலைகார திமுக, காவிரி பிரச்சினையில் ஊழல் குற்றச்சாட்டில் இருந்து தன்னையும், தன குடும்பத்தையும் காப்பாற்றிக்கொள்ள தமிழ்நாடு டெல்டா விவசாயிகளை அடமானம் வைத்த கருணாநிதி என்று எல்லாத்தையும் வீடு விடா போய் சொல்லுவோம் என எச்.ராஜா தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *