“அடப்பாவமே!”…. ஒரே ஒரு பயணிக்காக…. நடுவானில் 8 மணி நேரம்…. வைரலாகும் வீடியோ….!!!!

அமெரிக்காவுக்கு லண்டனிலிருந்து விமானத்தில் பயணித்த Kai Forsyth என்ற டிக்டாக் பிரபலம் விமானத்தில் தனி ஆளாக பயணம் செய்த அனுபவத்தை வீடியோவாக பகிர்ந்துள்ளார். அதாவது Kai Forsyth லண்டனில் இருந்து விமானத்தில் ஏறிய போது அங்கு பயணிகள் யாருமே இல்லையாம். அவர் மட்டும் தான் தனியாக விமானத்தில் கிட்டத்தட்ட 8 மணி நேரம் பயணம் செய்துள்ளார். பின்னர் விமானம் முழுவதும் காலியாக இருந்ததால் Kai Forsyth தன்னுடைய செல்போனில் வீடியோ எடுத்து டிக்டாக்கில் வெளியிட்டுள்ளார்.

மேலும் வீடியோ கேப்ஷனில் “நான் திரைப்படங்களை மணிக்கணக்கில் பார்த்துக்கொண்டிருந்தேன், உணவுகளை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் இது ஒரு வித்தியாசமான அனுபவமாக எனக்கு இருந்தது என்று வீடியோவில் அவர் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவானது தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர வைரலாகி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *