அடப்பாவமே!…. எஸ்.ஐ. மண்டையை உடைத்த போலிஸ்காரர்…. சிவகங்கையில் பயங்கரம்….!!!!

சிவகங்கை மாவட்ட கீழப்பூவந்தியில் ஆறுமுகம் என்பவர் வசித்துவருகிறார். இவரின் மகன் முத்துப்பாண்டி(32). இவர் இளையான்குடி காவல் நிலையத்தில் போலீசாக பணியாற்றி வருகிறார். முத்துப்பாண்டி நேற்று முன்தினம் கடைவீதியில் உள்ள சலூன் கடைக்காரர் பாஸ்கரன் என்பவரிடம் மது போதையில் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஸ்கரன் போர்வண்டி சோதனை சாவடியில் நின்று கொண்டிருந்த எஸ்.ஐ. பரமசிவதிடம் போய் கூறி உள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ்.ஐ. தகராறில் ஈடுபட்ட முத்துப்பாண்டி எச்சரித்து வீட்டுக்கு அனுப்பினார்.

இதனையடுத்து நேற்று காலை பூவந்தி சோதனை சாவடியில் பணியில் இருந்த எஸ்.ஐ. பரமசிவத்திடம் முத்துப்பாண்டி சென்று தகராறு செய்துள்ளார். “நானும் போலீஸ்காரன் தான் ஏற்கனவே என் மீது இரண்டு வழக்குகள் உள்ளது” என்று கூறி தகராறு செய்து அங்கிருந்த கல்லை எடுத்து தாக்கியுள்ளார். இதனால் பரமசிவன் பின்புறம் மண்டை உடைந்துள்ளது. இதனையடுத்து காயமடைந்த எஸ்.ஐ. பரமசிவம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளித்து வருகிறார். இந்த சம்பவம் குறித்து பூவந்தி போலீசார் வழக்கு பதிவு செய்து முத்து பாண்டியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *