அடடே…! மோடியே வந்துட்டாரு…. இனிமேல் என்ன கவலை…. உற்சாகத்தில் அமெரிக்கர்கள் …!!

பிரதமர் நரேந்திர மோடி 3 நாட்கள் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். உலக நாடுகள் கொரோனாவால் அல்லல் பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில், பிரதமர் மோடியின் இந்த அமெரிக்கப் பயணம் உலக அளவில் பலரின் கவனம் பெற்றுள்ளது. அமெரிக்கா சென்று கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பான கருத்தரங்கில் கலந்துகொள்ள இருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, ஐ நா சபை பொது கூட்டத்தில் பேச இருக்கிறார்.

அதேபோல சீனாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா, இந்தியா இணைந்து உருவாக்கிய குவாட் கூட்டத்திலும் கலந்து கொள்ளும் மோடி, அமெரிக்க தொழில் அதிபர்களுடன்  கலந்துரையாடுகின்றார். தற்போதைய சூழலில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்.

காரணம் கொரோனா வின் கோர தாண்டவத்தில் இருந்து எப்படியாவது மீண்டு விட மாட்டோமா என்ற எதிர்பார்ப்புடன் அமெரிக்க நாடும், அமெரிக்க மக்களும் இருந்து வரும் நிலையில் இந்த சந்திப்பு பல்வேறு திருப்பங்களை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உலகமே  கொரோனாவால் அல்லல்பட்டு, சின்னாபின்னமாக்கிய நாடாக அமெரிக்காவை பார்க்கப்படுகிறது. அதேபோல்கொரோனாவால் அதிகம் பாதித்த இரண்டாவது நாடு இந்தியா. அமெரிக்காவில் 4 கோடியே 32 லட்சத்து க்கும் அதிகமானோர்  தொற்றால்  பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் மூன்று கோடியே 30 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகிலேயே இரண்டாவது அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா  பிற நாடுகளை விட சிறப்பாக கையாண்டு கொரோனாவை கட்டுக்குள் வைத்திருப்பது உலக நாடுகளை வியப்படைய வைத்துள்ளது. பிரதமர் மோடி அமெரிக்கா சென்று இருக்கும் நிலையில் அமெரிக்காவின் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளது.

அமெரிக்காவில் நேற்று கொரோனாவால் ஒரு லட்சத்து 32 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று ஒரு லட்சத்து 33 ஆயிரத்துக்கும் அதிகமாக இருந்து வரும் நிலையில் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருகிறது.

இந்த நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த இந்தியா கையாண்ட உத்திகள் என்ன ? என்ற பல்வேறு விஷயங்களை அமெரிக்க அரசாங்கம் மோடியிடம் கேட்கும் என்று சொல்லப்படுகிறது. அதே நேரத்தில் மோடியும் இந்தியாவில் கையாண்ட சுகாதார கட்டமைப்பு, நடவடிக்கைகள்  உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை அமெரிக்காவிற்கு சொல்ல இருக்கின்றார். இதனால் பிரதமர் மோடியின் வருகைக்கு பிறகு அமெரிக்காவில் கொரோனா கட்டுக்குள் வரும் என்று ஒட்டுமொத்த அமெரிக்கர்களும் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை உற்சாகமாக பார்க்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *