அடடே….! “மணிரத்தினம் சொதப்பிய காதல் படங்கள்”…. இதோ ஒரு பார்வை….!!!

இயக்குனர் மணிரத்தினம் சொதப்பிய காதல் படங்கள் குறித்து ஒரு பார்வை.

தமிழ் சினிமா உலகில் முன்னணி இயக்குனரான பாரதிராஜா காதல் படங்களை இயக்கி ரசிகர்களின் மனதை கவர்ந்து வந்தார். அவருக்கு பிறகு இயக்குனர் மணிரத்தினம் காதல் படங்களை இயக்கி பிரபலமானார். மணிரத்னம் இயக்கத்தில் சொதப்பிய ஐந்து காதல் படங்களை நாம் பார்க்கலாம்.

முதலாவதாக ராவணன். இத்திரைப்படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், பிரித்திவிராஜ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இதில் ராமாயணத்தில் உள்ள ராவணனின் நியாயத்தை காட்டும் படமாக வெளியாகி இருந்தன. ஆனால் இது வெற்றி அடையவில்லை.

அடுத்து காற்று வெளியிடை. இத்திரைப்படத்தில் கதாநாயகனாக கார்த்தி மற்றும் கதாநாயகியாக அதிதி ராவ் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்தில் காதல் மற்றும் தேசப்பற்று உள்ளிட்டவற்றை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.

கடல் : இத்திரைப்படத்தில் கார்த்தியின் மகனான கௌதம் கார்த்திக் மற்றும் ராதாவின் மகளான துளசி ஆகிய இருவருக்கும் இது முதல் படமாகும்.  கடல் படத்தில் சாத்தான் மற்றும் தேவன் இவற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது.

ஓகே கண்மணி: இத்திரைப்படத்தில் துல்கர் சல்மான் மற்றும் நித்யா மேனன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இப்படத்தில் லிவ்விங் டுகெதர் முறை நடைமுறைக்கு எப்படி சாத்தியம் என்பதை கொண்டு படமாக எடுக்கப்பட்டது.

செக்க சிவந்த வானம்: இத்திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அரவிந்த்சாமி, அருண் விஜய், சிம்பு, பிரகாஷ்ராஜ், ஜோதிகா, அதிதி ராவ், ஐஸ்வர்யா ராஜேஷ் முதலியோர் நடித்திருந்தார்கள். இப்படம் கேங்ஸ்டர் சண்டையை கொண்டதாக அமைந்தது

இந்த ஐந்து திரைப்படங்களும் மணிரத்தினத்தின் ரசிகர்களிடையே அதிகம் எதிர்பார்க்கப்பட்ட தோல்வியடைந்த படமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *