இந்திய தபால் துறை பல்வேறு முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் சிறந்த திட்டம் குறித்த விபரத்தை பார்க்கலாம். இந்த திட்டத்தின் பெயர் தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு திட்டம். இதில் முதலீடு செய்தால் வருடத்திற்கு 6.7 சதவீதம் வட்டி கிடைக்கும். இதனால் முதலீட்டாளர்களுக்கு நல்ல வருமானமும் கிடைக்கும். மேலும் இந்த திட்டத்தின் லாகின் காலம் 60 மாதங்கள் அல்லது ஐந்து ஆண்டுகள்.

இதில் குறைந்தபட்சம் 100 இல் இருந்து எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். மேலும் இதில் தனிநபர் அல்லது மூன்று பேர் கூட்டாக கணக்கு தொடங்கலாம். மேலும் இதில் அட்வான்ஸ் டெபாசிட் என்று விருப்பமும் கொடுக்கப்படுகிறது . அதாவது 5 வருடத்திற்கான முதலீடு மொத்தமாக ஒரே முறையில் டெபாசிட் செய்யலாம். இந்த திட்டத்தில் சேர்ந்து 12 தவணைகளை செலுத்தியவர்கள் லோன் வாங்கும் வசதியும் உள்ளது.