அடடே நன்றாக வளர்ந்து விட்டாரே… பிக்பாஸ் சாண்டியின் மகளா இவர்?… வெளியான லேட்டஸ்ட் புகைப்படம்…!!!

பிக்பாஸ் பிரபலம் சாண்டி மாஸ்டர் மகள் லாலாவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது .

மானாட மயிலாட நிகழ்ச்சி மூலம் ஏராளமான ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் சாண்டி மாஸ்டர். இதை தொடர்ந்து இவர் சிம்பு, ரஜினி உள்ளிட்ட பல டாப் ஹீரோக்களின் படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து அசத்தினார் . இதையடுத்து இவர் நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீஸனில் போட்டியாளராக கலந்து கொண்டு பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் இறுதிப் போட்டி வரை சென்ற சாண்டி இரண்டாவது இடத்தைப் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தற்போது 3:33 என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார். சாண்டி மாஸ்டர்க்கு திருமணமாகி லாலா என்ற ஒரு பெண் குழந்தை இருக்கிறார். இந்நிலையில் குக் வித் கோமாளி பிரபலம் அஸ்வினுடன் லாலா எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தில் லாலா நன்றாக வளர்ந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.