அடடே…! தினமும் ஒரு கையளவு சாப்பிடுங்க….. நன்மைகள் ஏராளம் கிடைக்கும்…!!!!

கருப்பு உலர் திராட்சையை பொதுவாக நாம் பாயாசத்துக்கு பயன்படுத்துவோம். இதன் சுவை இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையும் சேர்ந்து இருக்கும். இந்த கருப்பு திராட்சையை தினமும் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால் ஏராளமான நன்மைகள் கிடைக்கிறது. இதில் என்னென்ன நன்மைகள் இருக்கிறது என்பது குறித்து இப்போது பார்க்கலாம். கருப்பு திராட்சையில் பொட்டாசியம் நிறைந்திருப்பதாலும், கால்சியம் உள்ளதாலும் எலும்பு ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. இதில் இரும்புச்சத்து மட்டுமல்லாமல் அதிக அளவு விட்டமின் சியும் உள்ளது.

இது உடலில் உள்ள தாதுக்களை விரைவாக உறிஞ்சுவதற்கு உதவுகிறது. இதை சாப்பிடுவதால் பொட்டாசியம் ரத்தத்தில் சோடியத்தை குறைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுக்குள் கொண்டு வரும். ஒரு கையளவு உலர் திராட்சை தொடர்ந்து சாப்பிடுவதன் மூலம் ரத்தசோகை அறிகுறிகளை தடுக்கலாம். கருப்பு திராட்சை உடலில் உள்ள எல்டிஎல் கொழுப்பைக் கரைக்கிறது. தினமும் கருப்பு திராட்சை சாப்பிடுவதன் மூலம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். கருப்பு திராட்சை சாப்பிடுவது மூலமாக பல் சிதைவில் இருந்து பாதுகாக்கலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து காணப்படுகிறது. எனவே இது மலச்சிக்கலைப் போக்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *