தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் நடிகர் அஜித். இவர் விடாமுயற்சி மற்றும் குட் பேட்‌ அக்லி ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ள நிலையில் இரு படங்களும் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. நடிகர் அஜித் துபாயில் நடைபெறும் கார் ரேஸில் கலந்து கொண்ட நிலையில் அவருடைய அணி மூன்றாம் இடத்தை பிடித்தது. தொடர்ந்து கார் ரேஸில் கவனம் செலுத்தும் அஜித் வருடத்திற்கு இனி ஒரு படத்தில் மட்டும் தான் நடிப்பேன் என்று கூறியுள்ளார். இந்நிலையில் நடிகர் அஜித் தற்போது ரசிகர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு வாழ்த்து கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், துபாயில் நடந்த கார் ரேஸுக்கு பின்னரும் அதற்கு முன்னரும் நீங்கள் எனக்கு கொடுத்து வரும் ஆதரவும் ஊக்கமும் மகிழ்ச்சி அளிக்கிறது.

எல்லாம் வல்ல இறைவன், என்னுடைய குடும்பத்தினர், திரைத்துறையினர், ஊடகங்கள், அரசியல் தலைவர்கள், விளையாட்டு பிரமுகர்கள், நலம் விரும்பிகள் மற்றும் என்னுடைய அன்பு ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன். இந்த அசைக்க முடியாத அன்பு ஊக்கமும் தான் என்னுடைய ஆர்வத்திற்கும் விடாமுயற்சிக்கும் உந்து சக்தியாக இருக்கின்றது. நீங்கள் என் மீது வைக்கும் அன்பை நிரூபிக்க நான் கடமைப்பட்டுள்ளேன். மேலும் அனைவருக்கும் பொங்கல் பண்டிகை மற்றும் சங்கராந்தி வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார்.