அடடே சூப்பர்!…. QNED மினி எல்.இ.டி டிவி மாடல்களுடன்…. எல்ஜியின் அசத்தலான அறிமுகம்….!!!!

எல்ஜி நிறுவனம் இந்தியாவில் நானோ செல் டிவி சீரீஸ் மற்றும் UHD AI ThinQ TV மாடல்கள், QNED மினி எல்இடி டிவி மாடல்களுடன் புதிய OLED Evo ரேன்ஜ் மாடல்கள் என ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி பட்டாளத்தையே அறிமுகப்படுத்தியுள்ளது.

OLED Evo வரம்பில் 77-இன்ச், 65-இன்ச், 55-இன்ச் உள்ளிட்ட மூன்று மாடல்கள் உள்ளன. அதோடு எல்ஜி நிறுவனம் அதன் ஏ1, பி1 மற்றும் சி1 சீரிஸில் புதிய மாடல்களையும், புதிய 88 இன்ச் 8கே ஓஎல்இடி மாடலையும் கொண்டு வந்துள்ளது.

எல்ஜி க்யூஎன்இடி மினி எல்இடி வரம்பில் முறையே QNED91 மற்றும் QNED99 தொடரின் கீழ் 4K மற்றும் 8K மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதோடு
கூடுதலாக, மெலிதான மற்றும் த்ரீ-சைட் சினிமா ஸ்க்ரீன் வடிவமைப்புடன் புதிய LG UHD AI ThinQ டிவிகள் வெளியாகியுள்ளன.

எல்ஜி UHD AI ThinQ TV, எல்ஜி QNED Mini LED TV, எல்ஜி OLED Evo, எல்ஜி Nano Cell TV-களின் இந்திய விலை விவரங்கள் :-

எல்ஜி 4K UHD AI ThinQ மாடல்கள் – ரூ.50,990 முதல்
எல்ஜி க்யூஎன்இடி சீரீஸ் – ரூ.2,66,990 முதல்
எல்ஜி ஓஎல்இடி டிவிகள் – ரூ.1,44,990 முதல்
எல்ஜி நானோசெல் டிவிகள் – ரூ.63,990 முதல்

முதன்முதலாக கடந்த ஜனவரி மாதம் நடந்த சிஇஎஸ் 2021 நிகழ்வில் நினைவூட்டும் வண்ணம், டிவி மாடல்கள் புதிய வெப்ஓஎஸ் 6.0 ஸ்மார்ட் டிவி ஓஎஸ் உடன் வெளியிடப்பட்டன.

எல்ஜி ஓஎல்இடி ஈவோ சீரீஸ் டிவி மாடல்களின் அம்சங்கள் :-

– செல்ப் லைட்டிங் பிக்சல் டிம்மிங் தொழில்நுட்பம்
– 55 இன்ச், 65 இன்ச் மற்றும் 77 இன்ச் மாடல்கள்
– எச்டிஆர், எச்டிஆர் 10 ப்ரோ, எச்எல்ஜி மற்றும் ஏஐ 4 கே ஆதரவு
– அல்ட்ரா எச்டி (3,840×2,160 பிக்சல்கள்) ரெசல்யூஷன்
– ஆல்பா 9 ஜென் 4 ஏஐ 4 கே ப்ராசஸர்
– வேரியபிள் ரெஃப்ரெஷ் ரேட் (விஆர்ஆர்)
– என்விடியா ஜி-சின்க்
– 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
– ஏஎம்டி ஃப்ரீசின்க் பிரீமியம்
-1 ms ரெஸ்பான்ஸ் டைம்
– இன்பில்ட் அலெக்சா மற்றும் கூகுள் அசிஸ்டென்ட்
– எல்ஜி வெப்ஓஎஸ்
– டால்பி அட்மோஸ் ஆதரவுடன் 4.2 சேனல் செட்டப்
– 60W ஸ்பீக்கர்ஸ்

இப்போது OLED C1 சீரீஸ் புதிய 83 இன்ச், 77 இன்ச், 65 இன்ச், 55 இன்ச், 48 இன்ச் உள்ளிட்ட வகைகளில் கிடைக்கிறது. இப்போது இவைகள் ஆல்பா 9 ஜெனரேஷன் 4 AI ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகின்றன. மேலும் 4K ரெசல்யூஓஷன் மற்றும் 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்டைக் கொண்டுள்ளன. அதோடு கூகுள் அசிஸ்டென்ட் ஆதரவு, இன்பில்ட் அலெக்சா, டால்பி அட்மோஸுடன் 40W, ஸ்பீக்கர்ஸ் உள்ளிட்ட அம்சங்களை கொண்டுள்ளது. எல்ஜி ஓஎல்இடி பி 1 சீரிஸ், ஜெனரேஷன் 4 ஆல்பா 7 ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. அட்மோஸ் மற்றும் டால்பி விஷன் ஐக்யூவுடன் வருகிறது. இது 65 இன்ச், 55 இன்ச் மாடல்களில் கிடைக்கிறது.

எல்ஜி நானோ செல் டிவி, யுஎச்டி டிவி சீரீஸ் அம்சங்கள் :-

யுஎச்டி டிவி சீரீஸ் மாடல்கள் மற்றும் நானோ செல் டிவி மாடல்கள் 4k ரெசல்யூஷன் மற்றும் இந்திய சந்தைக்கு பிரத்யேகமானவை. கிட்டத்தட்ட ஆறு அளவுகள் நானோ செல் டிவி தொடரில் உள்ளது. அவை முறையே 85 இன்ச், 75 இன்ச், 65 இன்ச், 55 இன்ச், 50 இன்ச், 43 இன்ச் ஆகும். அதேபோல் கிட்டத்தட்ட 7 அளவுகள் எல்ஜி யுஎச்டி டிவி தொடரில் உள்ளது. அவை முறையே 75 இன்ச், 70 இன்ச், 65 இன்ச், 60 இன்ச், 55 இன்ச், 50 இன்ச் மற்றும் 43 இன்ச். குவாட் கோர் ப்ராசஸர்களால் இவை இயக்கப்படுகிறது. மேலும் இவை AI திறன்களைக் கொண்டுள்ளன. உகந்த ஸ்க்ரீன் ப்ரைட்னஸிற்காக டோன் மேப்பிங்கை சரிசெய்ய சுற்றியுள்ள ஒளியை அளவிடும் லைட் சென்சார், சரவுண்ட் ஒலி அனுபவத்திற்கான ஒலி மாற்றம் உள்ளிட்ட அம்சங்களையும் பெற்றுள்ளது.

எல்ஜி க்யூஎன்இடி மினி எல்இடி டிவியின் அம்சங்கள் :-

எல்ஜி க்யூஎன்இடி மினி எல்இடி டிவி தொடரில் க்யூஎன்இடி 91 மற்றும் க்யூஎன்இடி 99 ரேன்ஜூகள் அடங்கும். இவை 85 இன்ச், 75 இன்ச் மற்றும் 65 இன்ச் மாடல்களில் கிடைக்கும்.
இதில் 4k மற்றும் 8k மாடல்களும் அடங்கும். இவை எல்ஜியின் குவாண்டம் டாட் நானோசெல் தொழில்நுட்பத்துடன் வருகின்றன. ஆல்பா 9 ஜென் 4 ஏஐ ப்ராசஸர் மூலம் இவை இயக்கப்படுகிறது. எச்எல்ஜி, எச்டிஆர் 10, 120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், டால்பி விஷன் என பலவற்றிற்கான ஆதரவைக் கொண்டுள்ளது.