தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் ஹன்சிகா மோத்வானி. தற்போது இவர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். இவர் தமிழில் தனுஷின் மாப்பிள்ளை திரைப்படத்தின் மூலமாக ஹீரோயினாக அறிமுகமானார். இதனைத்தொடர்ந்து எங்கேயும் காதல், ஓகே ஓகே, சேட்டை, தீயா வேலை செய்யணும் குமாரு, சிங்கம் 2, ஆம்பள, அரண்மனை, மான்கராத்தே, பாலு என முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார் ஹன்சிகா.

இந்நிலையில்  31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்ப்பதாக நடிகை ஹன்சிகா மோத்வானி தெரிவித்துள்ளார். நாம் நல்லது செய்தால் நமக்கு நல்லது நடக்கும் என்று என் அம்மா கூறுவார். எனவேதான் நான் நடிக்க வந்த பிறகு குழந்தைகளை தத்தெடுத்தேன். இப்போது 31 குழந்தைகளை தத்தெடுத்து வளர்த்து வருகிறது. பொங்கலுக்கு அவர்களுக்கு புத்தாடை எடுத்துக்கொடுத்தேன். குழந்தைகளின் சந்தோஷத்தை வார்த்தைகளால் சொல்லவே முடியாது என்று கூறினார்.