அடடே! சூப்பர்…. ரிலீசுக்கு தயாரான விக்ரம் படம்….. செம குஷியில் ரசிகர்கள்….!!!!

நடிகர் விக்ரம் நடித்துள்ள  துருவ நட்சத்திரம் வரும் டிசம்பர் மாதம் ரிலீஸ் என தகவல் வெளியாகியுள்ளது.

விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் “துருவ நட்சத்திரம்”. இந்த திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் கதாநாயகியாக  ரித்துவர்மா நடித்திருக்கின்றார். இந்தப் திரைப்படத்தில் பார்த்திபன், ராதிகா, சரத்குமார், சிம்ரன் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்ற பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்தின் சூட்டிங் கடந்த 2017-ம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் வெளிநாடுகளில் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இத்திரைப்படத்தை கடந்த 2018-ம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில பிரச்சனைகளால் தள்ளி வைக்கப்பட்டது.  இப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் துவங்கி உள்ளதாகவும், அதற்காக விக்ரம் 15 நாள் கால் சீட் ஒதுக்கியுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படத்தை வருகிற  டிசம்பர் மாதம் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த குஷியில் இருக்கின்றனர்.