அடடே சூப்பர்….. அம்மாவும் மகனும் அரசு பணியாளர் தேர்வில் தேர்ச்சி…. குவிந்து வரும் பாராட்டுக்கள்….!!!!!!

கேரளாவின்  மலப்புறம் மாவட்டத்தைச் சேர்ந்த தாயும் மகனும் கேரள மாநில அரசு பணியாளர் தேர்வாணையம்  நடத்திய தேர்வில் வெற்றி பெற்று அரசு பணியை பெற்றதன் மூலமாக இடைவிடாத முயற்சிக்கு சிதறந்த உதாரணமாக இருக்கின்றனர். கடந்த 10 வருடங்களாக அங்கன்வாடி ஆசிரியராக பணிபுரிந்து 42 வயது ஆன பிந்து இறுதிநிலை ஊழியருக்கான தேர்வில் 92 வது இடமும், 24 வயதான அவருடைய மகன் விவேக் கீழ்நிலை எழுத்து தேர்வில் 38வது இடமும் பிடித்து அரசு பணியை பெற்றிருக்கின்றனர். விவேக் பத்தாம் வகுப்பு படித்து வரும்போது அவனது பாட புத்தகங்களை படிக்க தொடங்கிய பின்பு அதன் பின் பரிசோதனை செய்து போட்டி தேர்வுக்கு தயாராகி வந்திருக்கின்றார்.

இதற்கு இடையே கல்லூரி படிப்பை முடித்து விவேக் அதே பயிற்சி வகுப்பில் சேர்ந்து இருக்கின்றார். எல் டி சி மற்றும் எல்ஜி எஸ் போன்ற பணிகளுக்கான தேர்வில் நான்காவது முயற்சியில் தேர்ச்சி பெற்ற பின்பு செய்தியாளர்களிடம் பேசும்போது, போட்டி தேர்வு தயாரிப்பில் என்னுடைய மகனும் பயிற்சி வகுப்பு பயிற்றுநர்களும் நண்பர்களும் தேவையான ஊக்கத்தையும் உதவியும் வழங்கியுள்ளனர். இடைவிடாத முயற்சி இறுதியில் அதற்கான பலனை தரும் என்பதற்கு நான் ஒரு உதாரணம் தோல்விகளை சந்தித்தாலும் இடைவிடாத முயற்சியின் மூலமாக வெற்றி பெற முடியும் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *