அபுதாபி‌ டி20 லீக் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற ஒரு தொடரில் பாப் டூ பிளஸ்சிஸ் தலைமையிலான ‌ மோரிஸ் வில்லே சாம்ப் ஆர்மி அணி மற்றும் ரோவ்மன் பவல் தலைமையிலான டெல்லி புல்ஸ் அணி மோதிய நிலையில் மோரிஸ் வில்லே அணி 10 ஓவர்களில் 112 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. முன்னதாக இந்த போட்டி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது பாப் டூ பிளஸ்சிஸ் எதிரணியைச் சேர்ந்த டி டேவிட் என்பவர் அடித்த பந்தை பவுண்டரியை தாண்டி செல்ல விடாமல் தடுத்தார்.

ஆனால் பந்து பவுண்டரி  சென்ற நிலையில் அவர் விடாமல் அதனை துரத்தி வந்தார். அவர் வேகமாக வந்த பவுண்டரி லைனை தாண்டிய போது அந்த பந்தை பால் பாய் எடுத்தார். இருவரும் கவனிக்காமல் ஒருவர் மீது ஒருவர் மோதிய நிலையில் டூ பிளஸ்சிஸை பால் பாய் தூக்கி வீசினார். மேலும் அவர் கவனிக்காமல் அவரைத் தூக்கி வீசிய நிலையில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.