24 பசுக்களை ரயில் முன் தள்ளிவிட்ட சம்பவம் உ.பி.,யில் நிகழ்ந்துள்ளது. இதில் 11 பசுக்கள் உயிரிழந்தன. சம்பல் மாவட்டம் லாராவன் கிராமத்தில் வேளாண்மை தொழில் அதிக அளவில் செய்யப்பட்டு வருவதால் விவசாயிகள் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இவர்களின் விளைநிலங்களில் உள்ள வேளாண் பயிர்களை அங்குள்ள பசு மாடுகள் மேய்ந்து நாசம் செய்வதாக தொடர்ந்து புகார் எழுந்து வந்தது.

இதன் பெயரில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் தொடர்ந்து ஆட்சியாளர்களிடம் புகார் அளித்து வந்தனர். ஆனால் நிர்வாகம் எதுவும் நடவடிக்கை எடுக்காத ஆத்திரத்தில் தொந்தரவு செய்யும் 24 பசுக்களை கொண்டு சென்று ரயில் வரும் நேரம் பார்த்து அதன் மீது பசுக்களை தள்ளிவிட்டு கொலை செய்தனர்.