அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கிய குடும்பத்தினர்…!!

அடக்கும் செய்ய பணம் கொடுத்து விட்டு தூக்கில் தொங்கி அண்ணனும் , தந்தையும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் சின்னகாளிபாளையதை  சேர்ந்த துரைராஜ் இவருக்குகோபாலகிருஷ்ணன்  என்ற  மகனும் , செல்வி சாந்தி 2 மகள்களும் உள்ளனர். நேற்று இடுக்குவாய்பகுதியிலுள்ள சகோதரி சாந்தியின் வீட்டிற்கு சென்ற கோபால் கோபாலகிருஷ்ணன் அவரிடம் 30 ஆயிரம் ரூபாய் பணத்தை கொடுத்துள்ளார் ஏன் பணத்தை கொடுக்கிறாய் என்று சாந்தி கேட்டதற்கு அவசிய செலவு தேவைப்படும் என்று கூறிவிட்டு கோபாலகிருஷ்ணன் வீடு திரும்பினார்.

Image result for தூக்கு மரணம்

இந்நிலையில் அவரது வீட்டிலிருந்து யாரும் வெளியே வராததால் சந்தேகமடைந்த அண்டை வீட்டுக்காரர்கள் உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது தூக்கில் தொங்கியபடி கோபாலகிருஷ்ணனும் அவரது தந்தை துரைராஜ் , கோபாலகிருஷ்ணனின் சகோதரி செல்வியும் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டனர். கோபாலகிருஷ்ணனும் தந்தை துரைராஜும்  சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் செல்விக்கு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.