அடக்கடவுளே…! 60வது வயதில் இரண்டாவது திருமணம் செய்த பிரபல வில்லன் நடிகர்….!!!

பிரபல வில்லன் நடிகர் ஆஷிஷ் வித்யார்த்தி தனது 60வது வயதில் அசாம் மாநிலத்தை சேர்ந்த ரூபாலி பருவா என்பவரை 2வது திருமணம் செய்து கொண்டார். குடும்பத்தினர், நெருங்கிய நண்பர்கள் முன்னிலையில் கொல்கத்தாவில் இன்று காலை இவர்களது திருமணம் நடைபெற்றது.  நடிகர் ஆசிஷ் வித்யார்த்தி அஸ்ஸாமை சேர்ந்த ரூபாலி பருவாவை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

பாபா, கில்லி, மாப்பிள்ளை, உத்தம புத்திரன் உட்பட பல தமிழ் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் இவர். பான் இந்திய நடிகராக ஆசிஷ் வித்யார்த்தி 11 மொழிகளில் 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முன்னதாக ஆஷிஷ், ராஜோஷி என்ற நடிகையை திருமணம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply